ஆன்மிகம்
தூய ஜார்ஜியார் ஆலய அர்ச்சிப்பு விழா 20-ந் தேதி தொடங்குகிறது
பிலாவிளை தூய ஜார்ஜியார் ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் பங்கு குடும்ப விழா ஆகியவை வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.
பிலாவிளை தூய ஜார்ஜியார் ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் பங்கு குடும்ப விழா ஆகியவை வருகிற 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் 20-ந் தேதி மாலை 3.30 மணிக்கு தூய ஜார்ஜியார் புதிய ஆலய அர்ச்சிப்பு விழா மற்றும் திருக்கொடியேற்றம், ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது. இதற்கு குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தலைமை தாங்கி, ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைக்கிறார்.
திருக்கொடியேற்ற திருப்பலிக்கு பின்னர் அன்பின் விருந்து நடக்கிறது. 21-ந் தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலை, நவநாள் திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலை, நவநாள் திருப்பலி, பின்னர் அன்பிய மக்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் செபமாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் உள்பட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
9-ம் திருவிழாவான 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர மாலை வழிபாடு, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் திருவிழாவான 29-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஜெபமாலை, நிறைவு விழா திருப்பலி, முதல் திருவிருந்து திருப்பலி, திருக்கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது. இதற்கு அருட்பணியாளர் லூர்து தலைமை தாங்க, காரங்காடு வட்டார முதல்வர் ஜார்ஜ் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழாவினை தொடர்ந்து பங்கு இறைமக்கள் இணைந்து நடத்தும் நாடகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை சிறில் தனிஸ்லாஸ், பங்கு பேரவை துணைத்தலைவர் தெரேசம்மாள், செயலாளர் கலா ராணி, துணைச்செயலாளர் ஜஸ்டின், பொருளாளர் ராபர்ட் கிளாரன்ஸ், கட்டிட குழு தலைவர் லாரன்ஸ், செயலாளர் சுமி, பொருளாளர் செல்வகுமார் உள்பட பலர் இணைந்து செய்து வருகின்றனர்.