ஆன்மிகம்
திருமானூர் தூய மங்கள மாதா ஆலய தேர்பவனி
திருமானூர் தூய மங்கள மாதா ஆலயத்தில் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் பழமை வாய்ந்த தூய மங்கள மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய விழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவை நல்லாயன் பெருமடம் பேராசிரியர் மைக்கேல் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. 5-ம் நாள் திரு விழாவில் பங்குதந்தை பெஞ்சமின் தலைமையில் நற்கருணை பவனி நடந்தது.
6-ம் நாள் விழாவில் புள்ளம்பாடி மறைமாவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து இரவு இன்னிசை நிகழ்ச்சியும், மின்னொளி அலங்காரத்தில் வேண்டுதல் தேர்ப்பவனியும், சம்மனசு தேருக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை புள்ளம்பாடி மறைமாவட்ட முதன்மை குரு ஹென்றி புஷ்பராஜ் மற்றும் மறை மாவட்ட அருட்பணியாளர்கள் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் தூய மங்கள மாதா எழுந்தருளி அலங்கார ஆடம்பர தேர்ப்பவனி நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் வீடுகள் தோறும் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் தூய மங்கள மாதா அன்னையை வழிபட்டு அன்னையின் அருளை பெற்றனர். அப்போது வாணவேடிக்கையும் நடைபெற்றது.
நேற்று காலை 11 மணியளவில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பாடற் திருப்பலியும், மாலையில் கிறிஸ்தவர்கள் முன்னிலையில் ஆலய கொடியிறக்கமும் நடைபெற்றது. தொடர்ந்து ஏலாக்குறிச்சி உதவி பங்கு தந்தை சந்தனம் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை பெஞ்சமின் மற்றும் பங்கு மக்கள், அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகள் செய்திருந்தனர்.