ஆன்மிகம்
நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

வேதநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா தொடங்கியது

Published On 2017-09-23 08:25 IST   |   Update On 2017-09-23 08:25:00 IST
வேதநகர் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வேதநகர் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி ஆக்டோபர் 1-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் நேற்று மாலை 4.30 மணிக்கு குருசடிகள் தரிசனம், 6 மணிக்கு ஜெபமாலையும், அருட்பணியாளர் ஜான்சன் கொடியேற்றினர். தொடர்ந்து திருப்பலி, இரவு அன்பியங்களின் ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலியும் நடக்கிறது. 2-ம் நாள் இரவு மறைமாவட்ட இயக்குனர் மைக்கேல் ராஜ் தலைமையில் கிராம முன்னேற்ற சங்க ஆண்டுவிழா, 3-ம் நாள் காலை 7 மணிக்கு திருப்பலி, இரவு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடக்கிறது.

30-ந் தேதி காலை 7 மணிக்கு மறை மாவட்ட முதன்மை பணியாளர் சாலமோன் தலைமையில் முதல் திருவிருந்து பெருவிழா, மாலை 6 மணிக்கு ஆடம்பர மாலை திருப்புகழ், நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு தேர்பவனி, 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 7.30 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலி நடக்கிறது.

இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். மதியம் 2 மணிக்கு அலங்கார தேர்பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணிப்பேரவை, நிதிக்குழு, பங்கு பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Similar News