ஆன்மிகம்
புனித ராயப்பர் சின்னப்பர் ஆலய தேரோட்டம்
ஆர்.சி.செட்டிபட்டி புனித ராயப்பர் சின்னப்பர் ஆலயத்தில் வேண்டுதல் தேர் திருப்பலியும், தேரோட்டமும் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
ஓமலூரை அடுத்த ஆர்.சி.செட்டிபட்டியில் புனித ராயப்பர் சின்னப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து நவநாள் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் வேண்டுதல் தேர் திருப்பலியும், தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டத்தை அருட்தந்தையர்கள் ஜான் ஜோசப், மரியான் ஆஸ்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.