ஆன்மிகம்

மலையன்குளம் வியாகுல அன்னை ஆலய தேர்ப்பவனி

Published On 2017-06-01 09:45 IST   |   Update On 2017-06-01 09:46:00 IST
மூன்றடைப்பு அருகே உள்ள மலையன்குளம் வியத்தகு வியாகுல அன்னை ஆலய பெருவிழாவை முன்னிட்டு தினமும் நற்கருணை பவனி நடந்தது.
மூன்றடைப்பு அருகே உள்ள மலையன்குளம் வியத்தகு வியாகுல அன்னை ஆலய பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த விழாவில் தினமும் மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், நற்கருணை பவனி நடந்தது. 9-ம் திருநாளன்று மாலை சிறப்பு ஆராதனையும், 10-ம் திருநாளில் காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலியும் நடந்தது.

2 நாட்கள் அன்னையின் தேர்ப்பவனியும், அன்னதானமும் நடந்தது. விழாவில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். 10-ம் திருநாள் மதியம் 2.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை எம்.ஜி.விக்டர், உதவி பங்குத்தந்தை கிங்ஸ்லி மற்றும் நிதிக்குழுவினர், ஆலய இறை மக்கள் செய்திருந்தனர்.

Similar News