ஆன்மிகம்

எடப்பாடியில் தூய செல்வநாயகி தேர் பவனி

Published On 2017-04-24 11:28 IST   |   Update On 2017-04-24 11:28:00 IST
எடப்பாடியில் உள்ள வெள்ளாண்டிவலசை தூய செல்வநாயகி ஆலயத்தில் பாஸ்கு திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் திருப்பலி பூஜைகள் நடந்தன.
எடப்பாடியில் உள்ள வெள்ளாண்டிவலசை தூய செல்வநாயகி ஆலயத்தில் பாஸ்கு திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் திருப்பலி பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலக மீட்பர் என்னும் ஒலி-ஒளி காட்சி 20 மேடைகளில் 300 நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு வீரமாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட யானை தந்தத்தால் ஆன தூயசெல்வ நாயகியின் ஆடம்பர தேர் பவனி வாண வேடிக் கைகளுடன் நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான கிறிஸ் தவர்கள் கலந்து கொண்டு பாடல்கள் பாடியவாறு சென்றனர். இதையடுத்து நேற்று அதிகாலை சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் திருப்பலி பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை பீட்டர் ஜான்பால் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Similar News