ஆன்மிகம்

உடன்குடி புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2016-09-26 13:13 IST   |   Update On 2016-09-26 13:13:00 IST
உடன்குடி மரியம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் உடன்குடி மரியம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 23-ம் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் அமலிநகர் பங்கு தந்தை அந்தோணி ஜெகதீசன் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மறையுரை நடந்தது.

திருவிழா தொடங்கியதையொட்டி தினமும் காலையிலும் மாலையிலும் திருப்பலியும், மறையுரையும் நடைபெறும். விழாவின் முக்கிய நாளான வருகிற வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நற்கருணை பவனியும், பங்கு தந்தை சில்வெஸ்டர் மறையுரையும் நடைபெறும். வருகிற 1-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தேவதாயின் சொரூப சப்பர பவனியும் மாலை 7 மணிக்கு மணப்பாடு புனித யாகப்பர் பங்கு தந்தை இருதயராஜ் பர்னாந்து தலைமையில் திருவிழா மாலை ஆராதனையும், மகேஷ் சந்தியா மறையுரையும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜக்கிய விருந்தும்,கலைநிகழ்ச்சியும் நடைபெறும்.

2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு ஐக்கிய விருந்து, மாலை 4 மணிக்கு விளையாட்டு போட்டிகள், தொடர்ந்து பரிசளிப்பு விழா, இரவு 8 மணிக்கு ஜெபமாலை, சப்பரபவனியும் நடக்கிறது. 3-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு திருப்பலியும்,கொடியிறக்க திருப்பலியும் நடைபெறும். மாலை 4 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, அருட்சகோதரிகள், நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் கமிட்டி மக்கள் செய்து வருகின்றனர்.

Similar News