ஆன்மிகம்

மாதாகோயில் புனித செல்வநாயகி அம்மாள் ஆலய திருவிழா

Published On 2016-09-26 09:05 IST   |   Update On 2016-09-26 09:05:00 IST
திருச்சி செல்வநாயகிபுரம் ஆலம் தெருவில் மாதாகோயில் புனித செல்வநாயகி அம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இந்த ஆலய திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் திருச்சி மறைமாவட்ட ஆயரும், பேராலய அதிபருமான அந்தோணி டிவோட்டா நல்லாசியுடன், புனித ஆரோக்கிய அன்னை பேராலய பங்குத்தந்தை லாரன்ஸ் அடிகளார், நிர்வாக பங்குத்தந்தை லியோர் மில்கியோர் பாபு, உதவி பங்குந் தந்தை அன்புராஜ் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து தினமும் மாலை 5.30 மணிக்கு சிறப்பு நவநாள் மற்றும் மறையுரையுடன் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (25-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு அன்னையின் திருவுருவம் தாங்கிய மின் அலங்காரத் தேர்பவனி நடைபெற்றது.

இதில் தஞ்சை புகழ் ஆல்பர்ட் மைந்தர்களின் கிளாரி டென்ட் இன்பநாத இன்னிசை இடம் பெறுகிறது. இந்த அலங்கார தேர்பவனி குட் ஷெட்ரோடு, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை வழியாக மீண்டும் ஆலயத்தை வந்து அடைந்தது.. அருட்தந்தை லாரன்ஸ் அடிகளார் புனிதப்படுத்தி பவனியைத் துவங்கி வைத்தார்.

இன்று (26-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதனை தூய பவுல் இறையியற் கல்லூரி அதிபர் டாக்டர் ஆரோக்கியராஜ் அடிகள் நிறைவேற்றுகிறார். முடிவில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.

வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அர்ச்வனத்து சின்னப்பர் திருவிழா அன்று பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கே.என்.நேரு எம்.எல்.ஏ. மற்றும் பலர் பங் கேற்கிறார்கள். அன்று இரவு இன்னிசை நிகழ்ச்சி நடை பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டி தலைவர் பீட்டர், செயலாளர் பேசில் தலைமையில் நிர்வாகிகள், விழா சிறப்பு குழுவினர், அன்பியங்கள், இளைஞர் மன்றம் மற்றும் இறை மக்கள் செய்து வருகிறார்கள்.

Similar News