ஆன்மிகம்

சங்கீதபுரம் புனித ஆரோக்கியமாதா ஆலய 104-வது ஆண்டு திருவிழா தேர்பவனி

Published On 2016-09-08 14:14 IST   |   Update On 2016-09-08 14:14:00 IST
திருச்சி தென்னூர் சங்கீதபுரம் புனித ஆரோக்கியமாதா ஆலய 104-வது ஆண்டு திருவிழா தேர்பவனி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
திருச்சி தென்னூர் சங்கீத புரத்தில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள் ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்தவரிசையில் தற்போது 104-வது ஆண்டு திருவிழா கடந்த 29.8.2016 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்சி புனித பாத்திமா அன்னை ஆலய பங்குத்தந்தை ஜேம்ஸ் செல்வ நாதன் கொடியேற்றினார். விழாவையட்டி தினமும் ஆடம்பர பாடல் திருப்பலி, நவநாள் ஜெபம் நடைபெற்று வருகிறது.

வருகிற 10-ந்தேதி வரை நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று இரவு அன்னையின் வெளி தேர்பவனி நடக்கிறது. இரவு 8 மணிக்கு பேண்டு வாத்தி யம் முழங்க, வாண வேடிக்கையுடன் நடைபெறும் இந்த தேர் பவனியில் ஏராளமானோர் கலந்துகொள்கிறார்கள்.

விழாவின் தொடர்ச்சியாக நாளை (9-ந்தேதி, வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு அன்னையின் உள் வீதி தேர் பவனி நடக்கிறது. வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை) ஆலய முக்கியஸ்தர்கள், சங்கீதபுரம் இளைஞர்கள் நடத்தும் 26-வது ஆண்டு அன்னதானம் நடக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் அன்பழகன், தொழில திபர் ஜோசப்லூயிஸ் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

Similar News