ஆன்மிகம்

காரைக்கால் அம்மையார் கோவிலில் தங்கிய கிறிஸ்தவர்கள்

Published On 2016-08-29 08:33 IST   |   Update On 2016-08-29 08:33:00 IST
காரைக்கால் வழியாக செல்லும் கிறிஸ்தவர்கள் காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் இரவு படுத்து தூங்கி காலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாகை மாவட்டம் வேளாங் கண்ணியில் இன்று (திங்கட்கிழமை) பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்கின்றனர்.

காரைக்கால் வழியாக செல்லும் கிறிஸ்தவர்கள் காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் இரவு படுத்து தூங்கி காலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கமாக இரவு நேரங்களில் கோவில் பூட்டப்படும். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் காரைக்காலில், பாதயாத்திரை செல்லும் கிறிஸ்தவர்கள் தங்குவதற்காக கோவில் மணிமண்டபம் திறந்து விடப்பட்டுள்ளது.

பாதயாத்திரை செல்லும் கிறிஸ்தவர்களுக்கு காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளர் அசனா எம்.எல்.ஏ. பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை வழங்கினார்.

Similar News