ஆன்மிகம்

அன்னை வேளாங்கன்னி கோயிலுக்கு நடைபயணம் புறப்பட்ட பக்தர்கள்

Published On 2016-08-10 14:01 IST   |   Update On 2016-08-10 14:01:00 IST
நாட்டார்குளத்தில் இருந்து அன்னை வேளாங்கன்னி கோயிலுக்கு நடைபயணம் பக்தர்கள் புறப்பட்டனர்.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார் குளத்தில் இருந்து ஆண்டு தோறும் ஆகஸ்டு 15-ந் தேதி நடைபயணமாக பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு செல்வது வழக்கம். இதற்காக இந்த ஆண்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பாக 41 நாள்கள் பக்தர்கள் ஊதா கலர் உடை அணிந்து விரதம் இருந்தனர்.

இதற்காக திருப்பலி தினந்தோறும் நாட்டார்குளம் சூசையப்பர் ஆலயத்தில் நடை பெற்றது. இவர்களை வழியனுப்பும் விதமாக சிறப்பு வழிபாடு நாட்டார்குளத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கெபியில் வைத்து நடந்தது. காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலையில் அசன பண்டிகை நடந்தது. இரவு 11 நடைபயணம் செல்லும் பக்தர்களை வழியனுப்பும் சிறப்பு ஜெபம் நடந்தது.

நாட்டார்குளம் பங்கு தந்தை இருதயராஜா ஜெபம் நடத்தினர். வேதியர் மரியசிங்கம் மற்றும் நண்பர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டனர். இங்கிருந்து நடைபயணமாக செல்லும் பக்தர்கள் வருகிற 15- ந்தேதி வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு திருப்பலியில் கலந்துகொள்வார்கள்.

Similar News