இடைக்காட்டூர் இருதய ஆண்டவர் திருத்தல தேர்பவனி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு பிரசித்தி பெற்ற திரு இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது. இந்த ஆலயத்தில் 122–ம் ஆண்டு திரு இருதய பெருவிழா கடந்த 24–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
அதை தொடர்ந்து தினமும் இறை செய்திகள் வாசிக்கப்பட்டு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய விழாவான மாதத்தின் முதல் வெள்ளி கூட்டு திருப்பலி திருவிழா அர்ச்சிப்பு நிகழ்ச்சி சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ் தலைமையில் மறை மாவட்ட பொருளர் அருட்தந்தை மைக்கேல்ராஜ், அருட்தந்தைகள் இளங்கேஸ்வரன், வின்சென்ட் அமல்ராஜ், ஜோசப் ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு திருப்பலி பூஜையை நடத்தினார்கள்.
அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு நன்றி செலுத்தும் திருப்பலி பூஜை, தேர்பவனி தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட மின்சார ரதத்தில் திரு இருதய ஆண்டவர் சொரூபம் அலங்கரிக்கப்பட்டு இடைக்காட்டூர் வீதிகளில் வலம் வந்தது.
அதை தொடர்ந்து இன்று சனிக்கிழமை நற்கருணை பெருவிழா நடந்தது.
விழாவில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான திரு பயணிகள் திரு இருதய ஆண்டவரை மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு செய்தனர். 10 நாட்கள் விழா ஏற்பாடுகளை திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ் தலைமையில் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், செல்ஸ் இளைஞர் பேரவையினர், பங்கு இறைமக்கள் ஆகியோர் செய்து இருந்த னர்.