மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா
மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த 19–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவை மறை மாவட்ட முதன்மை குருஜான் ஜோசப் ஸ்டனிஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத் தார். அதனைத் தொடர்ந்து தினசரி மாலை திருப்பலி, தேர்பவனி, நவநாள், அருளுரை, நற்கருணை, ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவிற்கு சிகரம் வைத்தாற்போல் தேர்த்திரு விழா நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு மேட்டுப்பாளையம் மறை மாவட்ட தலைமை குரு மற்றும் மேட்டுப் பாளையம் அற்புத கெபி ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை ஜேக்கப் தலைமை தாங்கி திருவிழா சிறப்புத் திருப்பலி, முதல் நற்கருணை அருட்சாதனம் வேண்டுதல் தேர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்கு வினாஸ் தலைமையில் திருவிழா சிறப்பு உறுதி பூசுதல், அருட்சாதனம் வழங்குதல் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன்பின்னர் இரவு ஆலய பங்கு தந்தை ரோசாரியோ ஆசீர்வதித்து திருவிழா அலங்கார தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாகச்சென்று மீண்டும் ஆலயத்தை இரவு நற்கருணை ஆசீர்வாதத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.