ஆன்மிகம்
ரோமாபுரியில் புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
நெய்வேலி அருகே ரோமாபுரியில் நடந்த புனித அந்தோணியார் ஆலய தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நெய்வேலி அருகே ரோமாபுரியில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பெருவிழா கடந்த 19–ந்தேதி மாலை 6 மணிக்கு திருவண்ணாமலை குழந்தை ஏசு ஆலய பங்கு தந்தை லாசர் சவரிமுத்து, கூனங்குறிச்சி பெரியநாயகி அன்னை மாதா ஆலய பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து 20–ந்தேதி மாலை பெரியாகுறிச்சி ஆலய பங்கு தந்தை லாரன்ஸ், கூனங்குறிச்சி ஆலய பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோரின் தலைமையில் நவநாள் திருப்பலியும், ஆராதனையும் நடைபெற்றது.
தேர் பவனி
பின்னர் 21-ந்தேதி கடலூர் ஆக்னஸ் குரு மடம் அதிபர் ரொசாரியோ, திருவண்ணாமலை குழந்தை ஏசு ஆலய பங்கு தந்தை லாசர் சவரிமுத்து, புனித பால் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் நிர்மல்ராஜ், கும்பகோணம் பங்கு தந்தை ரெஜிஸ், முகையூர் உதவி பங்கு தந்தை ஆரோக்கிய ஜான் ராபர்ட், கூனங்குறிச்சி பங்கு தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோரின் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியாரின் ஆடம்பர தேர் பவனி நடந்தது.
தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை கிறிஸ்துராஜ், வேதியர் தேவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.