ஆன்மிகம்
ஆலந்தூரில் புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
பரங்கிமலை ரெயில் நிலைய சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் 32-வது ஆண்டு பெருவிழா நடந்தது.
சென்னையை அடுத்த ஆலந்தூர், பரங்கிமலை ரெயில் நிலைய சாலையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் 32-வது ஆண்டு பெருவிழா நடந்தது. இதையொட்டி சிறப்பு செபமாலை, நவநாள் ஜெபம், திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதம் உள்ளிட்டவை நடந்தது.
பின்னர் தூய வேளாங்கண்ணி அன்னையின் கெபி மந்திரிப்பு மற்றும் மாலை பள்ளி திறக்கப்பட்டது. சிறப்பு திருப்பலியை செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் நீதிநாதன் நடத்தி தேர்பவனியை தொடங்கிவைத்தார்.
இதில் ஆலய பங்குத்தந்தை அருள் ஆனந்த் மற்றும் பங்குப்பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் கலந்து கொண்டனர். ஆலந்தூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி சென்றது.