ஆன்மிகம்

அமராவதிவிளை தூய அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2016-05-12 09:10 IST   |   Update On 2016-05-12 09:10:00 IST
அமராவதிவிளை தூய அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
அமராவதிவிளை, கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 22-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. 14-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி, இரவு 8 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

வருகிற 15-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதிய பங்கு உதயமாகும் விழா, ஒன்றிப்பு விழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, நவநாள், 5.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.

தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, நவநாள், திருப்பலி, ஆண்டுவிழா கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. வருகிற 21-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள், 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனை, இரவு 8 மணிக்கு தேர்ப்பவனி, வாணவேடிக்கை போன்றவை நடைபெறுகிறது.

திருவிழாவின் இறுதி நாளான 22-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருப்பலி, முதல் திருவிருந்து வழங்குதல் போன்றவை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் தலைமை தாங்குகிறார். இரவு 8 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை திருவிழா குழுவினர் செய்துள்ளனர்.

Similar News