ஆன்மிகம்

திருமூலநகர் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா தொடங்கியது

Published On 2016-04-16 08:18 IST   |   Update On 2016-04-16 08:18:00 IST
அழகப்பபுரம் அருகே உள்ள திருமூலநகர் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா தொடங்கியது
அழகப்பபுரம் அருகே உள்ள திருமூலநகரில் புனித ஜார்ஜியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளில் பெரியசாமிபுரம் பங்கு அருட்பணியாளர் செல்வ ஜார்ஜ் கொடியேற்றினார். தொடர்ந்து அழகப்பபுரம் பங்கு அருட்பணியாளர் மைக்கிள் ஜெகதீஸ் தலைமையில் திருப்பலி நடந்தது.

தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வருகிற 21-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது. 22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனையும், தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.

திருவிழா இறுதி நாளான 23-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், பிற்பகல் 2.30 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஜோசப் ஸ்டார்லின் மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.

Similar News