ஆன்மிகம்

ராயபுரம் கிராமத்தில் புனித ஜெர்மேனம்மாள் ஆலய தேர்பவனி விழா

Published On 2016-04-11 09:48 IST   |   Update On 2016-04-11 09:47:00 IST
ராயபுரம் கிராமத்தில் புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழாவில் தேர்பவனி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு 104-ம்ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி திருப்பலி மறையுரை நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவு 10 மணிளயவில் திருவிழா திருப்பலி தேர் பவனி வந்தது. மறுநாள் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், 8 மணியளவில் புதுநன்மை திருப்பலியும் நடைபெற்றது.

திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆலய பாதிரியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். தேர்பவனி திருநாளன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். இதையொட்டி அரசு பஸ் வசதி மதுரை பெரியார், வாடிப்பட்டி மற்றும் சோழவந்தானில் இருந்து செய்யப்பட்டு இருந்தது.

ரிஷபம் ஊராட்சி மன்றத் தலைவர் மனோண்மணி பழனியப்பன் மற்றும் பணியாளர்கள் சுகாதார ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணிவெள்ளைச்சாமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயசித்ரா, பிரகாஷ், கேசவராமசந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News