கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள்: எம்.எஸ்.டோனியை முந்திய விராட் கோலி

Published On 2024-03-30 06:28 GMT   |   Update On 2024-03-30 06:28 GMT
  • பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
  • இதன்மூலம் உள்ளூர் அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

பெங்களூரு:

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோற்றது. இதன்மூலம் உள்ளூர் அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கொல்கத்தா 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு அணி 2-வது தோல்வியை தழுவியது.

பெங்களூரு அணி தொடக்க வீரரும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான விராட் கோலி நேற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 83 ரன் எடுத்தார். பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் அரை சதம் எடுத்திருந்தார். சென்னைக்கு எதிராக மட்டுமே 21 ரன்னில் வெளியேறினார்.

இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 4 சிக்சர்கள் அடித்தன் மூலம் விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார். அவர் டோனியை முந்தினார்.

விராட் கோலி 232 இன்னிங்சில் 241 சிக்சர்கள் அடித்துள்ளார். டோனி 218 இன்னிங்சில் 239 சிக்சர்கள் அடித்துள்ளார்.

கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், ரோகித் சர்மா 261 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், டிவில்லியர்ஸ் 251 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி, டோனி 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர்.

Tags:    

Similar News