கிரிக்கெட்

டேரில் மிட்செல்

இங்கிலாந்து மண்ணில் வரலாற்று சாதனை படைத்த டேரில் மிட்செல்

Published On 2022-06-27 12:32 GMT   |   Update On 2022-06-27 12:32 GMT
  • டேரில் மிட்செல் 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 190 ரன்களும் 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார்.
  • இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி 23-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 329 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக டேரில் மிட்செல் 109 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 360 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 326 ரன்கள் எடுத்தது. இதில் டேரில் மிட்செல் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு 296 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2-வது இன்னிங்சை இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.

3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதமும் 2-வது இன்னிங்சில் அரை சதம் அடித்த டேரில் மிட்செல் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

டேரில் மிட்செல் முதல் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் சதம். 2-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் 190 ரன்களும் 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார். 3-வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் சதமும் 2-வது இன்னிங்சில் அரை சதமும் அடித்தார்.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு தொடரில் 538 ரன்கள் எடுத்து டேரில் மிட்செல் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு மார்டின் டோனெல்லி 462 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News