கிரிக்கெட்

புதிய அவதாரத்தில் ஷிகர் தவான் - வைரலாகும் வீடியோ

Update: 2023-03-21 12:26 GMT
  • இந்திய அணியில் இடம் கிடைக்காத ஷிகர் தவான் தனது கவனத்தை தொலைக்காட்சி பக்கமாக திருப்பியுள்ளார்.
  • ஷிகர் தவான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் ஒரு நாள் போட்டியில் ஷிகர் தவான் அறிமுகமானார். தனது 100-வது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த 9-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதுவரை 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான் 6793 ரன்கள் குவித்துள்ளார். இதில் 17 சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 143 ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடியது. இதில், ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. வங்கதேசத்திற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஷிகர் தவான் இடம் பெற்றிருந்தார்.


இதுவே அவரது கடைசி ஒரு நாள் போட்டி. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் ஷிகர் தவான் இடம் பெறவில்லை. ஆனாலும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அணியில் இடம் கிடைக்காத ஷிகர் தவான் தனது கவனத்தை தொலைக்காட்சி பக்கமாக திருப்பியுள்ளார். இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள தொலைக்காட்சி தொடர் குந்தலி பாக்யா (Kundali Bhagya). கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி முதல் ஜீ ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதில் ஷிகர் தவான் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடரில் தனது காட்சியை முடித்துக் கொடுத்த நடிகை அஞ்சும் ஃபஹீ , தொடர்ந்து இயக்குநர் அபிஷேக் கவுர் மற்றும் ஷிகர் தவானுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.


இந்தப் புகைப்படங்கள் குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர், ஷிகர் தவானின் போலீஸ் கெட்டப் நன்றாக இருப்பதாகவும், இன்னும் சிலர் இப்படி நடிப்பதை விட்டு விட்டு மீண்டும் அணியில் இடம் பிடிப்பதில் கவனம் செல்த்த வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

ஷிவர் தவான் போலீஸ் கெட்டப் தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


ஷிகர் தவான் இதற்கு முன்னதாக டபுள் எக்ஸ் எல் என்ற படத்தில் சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஹூமா குரேஷியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News