கிரிக்கெட்

 பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம்

ராவல்பிண்டி டெஸ்ட்- 3 ஆம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள்

Update: 2022-12-03 14:05 GMT
  • பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 136 ரன்கள் குவித்தார்.
  • இங்கிலாந்தை விட பாகிஸ்தான் 158 ரன்கள் பின் தங்கியுள்ளது

ராவல்பிண்டி:

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி முதல் இன்னிங்சில், 657 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, விளையாடிய பாகிஸ்தான் அணி 2 நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் சதம் அடித்தனர்.

தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் 114 ரன்கள் அடித்து அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 121 எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் 136 ரன்கள் குவித்தார். ஜாக்ஸ் பந்து வீச்சில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தை விட பாகிஸ்தான் இன்னும் 158 ரன்கள் பின் தங்கியுள்ளது.

Tags:    

Similar News