கிரிக்கெட்

சென்னை சேப்பாக்கம் தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் போட்டி முடிவு குறித்து ஒரு பார்வை

Published On 2023-10-28 01:48 GMT   |   Update On 2023-10-28 01:48 GMT
  • பாகிஸ்தான் 46.4 ஓவரில் 270 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது
  • தென்ஆப்பிரிக்கா 47.2 ஓவரில் இலக்கை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டி குறித்த தகவல்கள்:-

1. உலகக் கோப்பையில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 7-வது போட்டியாக இது அமைந்தது.

2. பாகிஸ்தான் அணியை 1999 உலகக் கோப்பைக்குப்பின் (ஒருநாள் மற்றும் டி20) தென்ஆப்பிரிக்கா முதன்முறையாக வென்றுள்ளது.

3. உலகக் கோப்பையில் தென்ஆப்பிரிக்கா 2-வது அதிகபட்ச சேஸிங் ஆகும். இதற்கு முன் 2011-ல் இந்தியாவுக்கு எதிராக 297 ரன்களை சேஸிங் செய்துள்ளது. தற்போது 271 ரன்னை எட்டியுள்ளது. 1999-ல் இந்தியாவுக்கு எதிராக 254 ரன்கள் சேஸிங் செய்துள்ளது.

4. பாகிஸ்தான் 270 ரன்களுக்கு மேல் அடித்து 1975-ல் இருந்து 2019 வரை 14 போட்டிகளில் ஒருமுறைதான் தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் 3 முறை 270 ரன்களுக்கு மேல் அடித்து, 2 முறை தோல்வியை சந்தித்துள்ளது.

5. இந்த போட்டியில் 18 பேட்ஸ்மேன்கள் கேட்ச் மூலம் அவுட்டானார்கள். இதன்மூலம் உலகக் கோப்பையில் கேட்ச் மூலம் அதிக பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த போட்டியாக இது அமைந்துள்ளது.

6. சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் நான்கு போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி வாகை சூடின.

Tags:    

Similar News