கிரிக்கெட்

அரை சதமடித்த ஹாரி புரூக்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - பாகிஸ்தான் 202 ரன்னில் ஆல் அவுட்

Published On 2022-12-10 15:08 GMT   |   Update On 2022-12-10 15:08 GMT
  • முதலில் ஆடிய இங்கிலாந்து 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
  • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 62.5 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முல்தான்:

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பென் டக்கெட் 63 ரன்னும், ஒல்லி போப் 60 ரன்னும் எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை அள்ளினார். ஜாஹித் மக்முது 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் ஆசம் 75 ரன்னும், ஷாகில் 63 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டும், மார்க் வுட், ஜோ ரூட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 79 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹாரி புரூக் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி இதுவரை 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

Similar News