கிரிக்கெட் (Cricket)
null

அயர்லாந்தை வீழ்த்தி கிட்டதட்ட அரையிறுதியை உறுதி செய்தது நியூசிலாந்து

Published On 2022-11-04 13:41 IST   |   Update On 2022-11-04 13:56:00 IST
  • அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.
  • நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்-1 பிரிவில் இன்று காலை அடிலெய்டில் தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் பால் ஸ்டிரிசிங் (37 ரன்) பால்பிர்னி (30 ரன்) அவுட் ஆன பிறகு விக்கெட்டுகள் சரிந்தது. அயர்லாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டும், சோதி, டிம்சவுத்தி, சான்ட்னெர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அரை இறுதி வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகி விட்டது. அந்த ரன் ரேட் வலுவாக இருப்பதாக அரை இறுதிக்கு செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது.

Tags:    

Similar News