கிரிக்கெட்

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட்- இந்திய கேப்பிடல்ஸ் அணி சாம்பியன்

Published On 2022-10-06 06:44 GMT   |   Update On 2022-10-06 06:44 GMT
  • முதலில் பேட்டிங் செய்த இந்திய கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 211 ரன் குவித்தது.
  • காம்பீர் தலைமையிலான இந்திய கேப்பிடல்ஸ் அணி 104 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்ற லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்தது. 4 அணிகள் விளையாடிய இத்தொடரின் இறுதி போட்டி நேற்று இரவு ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் இந்திய கேப்பிடல்ஸ்-பில்வாரா கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த இந்திய கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 211 ரன் குவித்தது. ரோஸ் டெய்லர் 82 ரன்னும், மிட்செல் ஜான்சன் 62 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் பில்வாரா கிங்ஸ் அணி 18.2 ஓவரில் 107 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் காம்பீர் தலைமையிலான இந்திய கேப்பிடல்ஸ் அணி 104 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Tags:    

Similar News