கிரிக்கெட் (Cricket)
null

சுப்மன் கில் அதிரடி சதம் - சன்ரைசர்ஸ் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்!

Published On 2023-05-15 21:25 IST   |   Update On 2023-05-15 21:28:00 IST
  • சுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார்.
  • சன்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசஸ்ர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க வீரர் ரித்திமான் சாகா டக் அவுட் ஆகி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் துவக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்தார். இவர் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 47 ரன்களில் ஜன்சென் பந்தில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்டியா 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

 

பின் களமிறங்கிய டேவிட் மில்லர் 7 ரன்களையும், ராகுல் தேவாட்டியா 3 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். தசுன் ஷனுகா 9 ரன்களை எடுத்தார். ரஷித் கான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டனஸ் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை வீழ்த்தினார். மார்கோ ஜன்சென், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நடராஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News