சினிமா
ஆர்யன் கான்

போதைப்பொருள் வழக்கு - ஜாமீனில் வெளியே வந்தார் ஆர்யன் கான்

Published On 2021-10-30 11:45 IST   |   Update On 2021-10-30 12:37:00 IST
சொகுசுக்கப்பலில் போதைப்பொருள் விருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
சொகுசுக்கப்பலில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கடந்த அக்டோபர் 2ம் தேதி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, தனக்கு ஜாமீன் கோரி ஆர்யன் கான் சிறப்பு என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் இரண்டு முறை வழக்கு தொடர்ந்தார். இந்த இரண்டு வழக்குகளும் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆர்யன் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.



இதுகுறித்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், ஆர்யன் கானுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜாமீன் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிவடைந்ததால் மும்பை ஆர்தர் சாலை சிறையில் இருந்து ஆர்யன் கான் இன்று வெளியே வந்தார்.

Similar News