சினிமா
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா பயணம்

Published On 2021-06-17 13:25 IST   |   Update On 2021-06-17 13:29:00 IST
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ள நடிகர் ரஜினிகாந்த், அங்கு சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். 

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள ரஜினி, இதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியும் கோரி இருந்தார். 



தற்போது, நடிகர் ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அவர் வருகிற ஜூன் 19-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். 

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், மருமகன் தனுஷும் தற்போது அமெரிக்காவில் தான் உள்ளனர். நடிகர் தனுஷ் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News