சினிமா
எடப்பாடி பழனிச்சாமி, விஜய்

மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Published On 2021-01-01 11:09 IST   |   Update On 2021-01-01 17:10:00 IST
நடிகர் விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். மாஸ்டர் படம் பொங்கலையொட்டி வெளியாக உள்ளதால் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் விஜய் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார்.



அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. பல கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுத்துருக்காங்க. நிறைய பேருக்கு நஷ்டம் ஆகிட்டு இருக்கு. அந்த எல்லா படத்தையும் கருத்தில் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என விஜய் கேட்டுக்கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Similar News