சினிமா
அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சன் தந்தைக்கு போலந்து கவுரவம்

Published On 2020-10-27 04:56 IST   |   Update On 2020-10-27 16:28:00 IST
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனை கவுரவிக்கும் வகையில் போலந்து நாட்டின் ரோக்லா நகர நிர்வாகம், அங்குள்ள ஒரு சதுக்கத்துக்கு அவரது பெயரை சூட்டியுள்ளது.
மும்பை:

இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன், கடந்த 2003-ம் ஆண்டு காலமானார். அவர் புகழ்பெற்ற கவிஞரும் ஆவார். அவரை கவுரவிக்கும் வகையில், போலந்து நாட்டின் ரோக்லா நகர நிர்வாகம், அங்குள்ள ஒரு சதுக்கத்துக்கு அவரது பெயரை சூட்டியுள்ளது.

இதை அமிதாப்பச்சன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தந்தை பெயர் பொறிக்கப்பட்ட பெயர் பலகை படத்தையும் அவர் இணைத்துள்ளார்.

அதில், “தசராவையொட்டி, இதைவிட பெரிய ஆசீர்வாதம் வேறு இருக்க முடியாது. இது எங்கள் குடும்பத்துக்கும், ரோக்லாவில் உள்ள இந்தியர்களுக்கும், இங்குள்ள இந்தியர்களுக்கும் பெருமைக்குரிய தருணம் ஆகும்” என்று அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

Similar News