சினிமா

தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்

Published On 2017-02-21 17:22 IST   |   Update On 2017-02-21 17:22:00 IST
தற்கொலை செய்துகொண்ட விவசாயி ஒருவரின் குடும்பத்துக்கு ராகவா லாரன்ஸ் உதவி செய்ய முன்வந்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பு மட்டுமில்லாமல் பல்வேறு சமூக நலன்களிலும் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இருதய ஆபரேஷன், கல்வி என பல வகையிலும் ஏழை, எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று விவசாய சங்கத்தை சேர்ந்த சில விவசாயிகள் ராகவா லாரன்ஸை சந்தித்து, விவசாயிகள் தற்கொலை பற்றி பேசியுள்ளனர். அப்போது, மயிலாடுதுறையை சேர்ந்த கண்ணதாசன் என்ற விவசாயி, ரெயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை கேட்டதும், ராகவா லாரன்சுக்கு மிகுந்த வேதனையை கொடுத்ததாம்.



தற்கொலை செய்துகொண்ட விவசாயி கண்ணதாசன், ஆதரவற்ற அவரது குடும்பம்


அவருடைய குடும்பத்துக்கு ராகவா லாரன்ஸ் உதவ முன்வந்துள்ளார். மேலும், அவர்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, விவசாயிகளுக்காக நாம் இருக்கிறோம் என்பதை காட்டவேண்டும். விவசாயிகள் இல்லாமல் நாம் இல்லை. அவங்க சேத்துல கால் வச்சாத்தான், நாம சோத்துல கை வைக்க முடியும் என்றார்.

மேலும், K.கண்ணதாசன், நெ.1, ஆலங்குடி, ஆலங்குடி (அஞ்சல்), மயிலாடுதுறை (தாலுக்கா), நாகப்பட்டினம் (மாவட்டம்). இதுதான் அந்த விவசாயியின் முகவரி என்று இதனையும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Similar News