சினிமா

கமல்ஹாசனுடன் மீண்டும் இணைய விரும்புகிறேன்: பாத்திமா சனா ஷேக் பேட்டி

Published On 2017-01-01 12:57 IST   |   Update On 2017-01-01 12:57:00 IST
‘தங்கல்’ படத்தில் மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவராக தோன்றும் பாத்திமா சனா ஷேக், கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
‘அவ்வை சண்முகி’ படத்தின் தழுவலாக கமல்ஹாசன் - தபு நடிப்பில் இந்தியில் வெளியான ‘சாச்சி-420’ படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் பாத்திமா சனா ஷேக்.

தற்போது இளம்பெண்ணாக வளர்ந்துள்ள பாத்திமா, பாலிவுட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தங்கல்’ படத்தில் மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவராக நடித்துள்ளார்.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாத்திமா சனா ஷேக், கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

‘சாச்சி-420 படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்தபோது, நான் மிகவும் சிறியவளாக இருந்தேன். குழந்தைப்பருவம் என்பதால் அப்போது நடிக்க வேண்டும் என்பதுபோல் எனக்கு தோன்றவில்லை. படத்தின் இயக்குனராக கமல்ஹாசன் சொன்னதை செய்தேன்.

அந்த அனுபவத்தை புதுப்பித்து கொள்ள இப்போது அவருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்’ என்று பாத்திமா குறிப்பிட்டுள்ளார்.

Similar News