சினிமா

பாடகர் உதித் நாராயணன், உஷா கண்ணாவுக்கு முஹம்மது ரபி விருது: மத்திய மந்திரி வழங்கினார்

Published On 2016-12-25 10:11 IST   |   Update On 2016-12-25 10:11:00 IST
மறைந்த இந்தி திரையிசைப் பாடகர் முஹம்மது ரபியின் பெயரால் வழங்கப்படும் சிறப்பு விருதுகளை பாடகர் உதித் நாராயணன், பாடகி உஷா கண்ணா ஆகியோருக்கு பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வழங்கினார்.

மும்பையில் இயங்கிவரும் ஒரு அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் மறைந்த இந்தி திரையிசைப் பாடகர் முஹம்மது ரபியின் பெயரால் இசைத்துறை பிரபலங்களை தேர்வுசெய்து சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு பாடகர் உதித் நாராயணன், பாடகி உஷா கண்ணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் இருவருக்கும் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.  

நிகழ்ச்சியின்போது, மறைந்த பாடகர் முஹம்மது ரபிக்கு புகழாரம் சூட்டிய மந்திரி பிரதான், அவர் மிகச்சிறந்த பாடகராக பிரபலமானது மட்டுமல்லாமல், தனது ஈடிணையற்ற குரலால் பல நடிகர்களையும் பிரலமாக்கி வைத்தார் என குறிப்பிட்டார்.

கடந்த 1980-ம் ஆண்டு முஹம்மது ரபியுடன் இணைந்து பாடிய ஒரு பாடலை உதித் நாராயணன் விழா மேடையில் பாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.

Similar News