சினிமா

பிரதமர் மோடியின் முன்னாள் பாதுகாவலர் நடிகராக அறிமுகம்!

Published On 2025-08-22 17:53 IST   |   Update On 2025-08-22 17:53:00 IST
  • எனது நிஜ வாழ்க்கை உணர்ச்சிகளை கேமரா முன் காட்டுவதாகும்.
  • 'ரா', என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் தற்போது நடிகராக அறிமுகமாகி உள்ளார்.

உத்தரகாண்டைச் சேர்ந்த லக்கி பிஷ்ட், தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) கமாண்டோவாக இருந்தவர் ஆவார்.

தற்போது MX பிளேயரில் ஒளிபரப்பாகும் "சேனா - கார்டியன்ஸ் ஆஃப் தி நேஷன்" என்ற வலைத் தொடரில் அவர்  நடித்துள்ளார்.

இந்த வலைத் தொடரை அபினவ் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்திய ராணுவத்தில் சேர அமெரிக்காவில் தனது வேலையை விட்டுவிட்டு வரும் கார்த்திக் என்ற இளைஞன் பயங்கரவாதிகளை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதைச் சுற்றி இந்தத் தொடர் அமைந்துள்ளது.

ஊடகங்களிடம் பேசிய லக்கி பிஷ்ட், "ஒரு உண்மையான வீரரை திரையில் சித்தரிக்கும் எண்ணத்துடன் இந்த வேடத்தை நான் ஏற்றேன்.

இராணுவ பின்னணி மற்றும் பயிற்சியில் பெற்ற அனுபவங்கள் நடிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. நடிப்பு எனக்கு ஒரு புதிய துறை என்றாலும், ஒரு வீரராக நடிப்பது என்பது எனது நிஜ வாழ்க்கை உணர்ச்சிகளை கேமரா முன் காட்டுவதாகும்."

லக்கி பிஷ்ட் தனது வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.  மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார்.

கூடுதலாக, எல்.கே. அத்வானி, ராஜ்நாத் சிங் மற்றும் முன்னாள் அசாம் முதல்வர் தருண் கோகோய் போன்ற பிரபலங்களுக்கு மெய்க்காப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2010 இல் இந்தியா வந்தபோது பாதுகாப்பு அளித்த குழுவிலும் அவர் உறுப்பினராக இருந்தார். 'ரா', என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் போன்றவற்றிலும் பணியாற்றியுள்ளார்.    

Tags:    

Similar News