சினிமா
விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், அபி ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் முன்னோட்டம்.
ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. அசோக் செல்வன், அபிஹாசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஞ்சு குரியன், ரித்விகா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இப்படத்தை விஷால் வெங்கட் இயக்குகிறார்.
மேலும் இப்படத்தில் நாசர், அனுபமா குமார், இளவரசு, கே.எஸ்.ரவிக்குமார், பானுப்பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதன் இசையமைக்கும் இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
அசோக் செல்வன், அபி ஹாசன்
மணிகண்டன் வசனம் எழுதி உள்ளார். பெலிக்ஸ்ராஜா, மனோஜ் குமார் ஆகியோர் கலை இயக்குனர்களாக பணியாற்ற உள்ளனர். தினேஷ் மற்றும் ஸ்ரீகிரிஷ் நடனம் அமைக்கின்றனர். பாடல்களை சினேகன் மற்றும் மிர்ச்சி விஜய் எழுதுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.