சினிமா
கசட தபற படத்தின் போஸ்டர்

கசட தபற

Published On 2021-06-04 15:11 IST   |   Update On 2021-06-04 15:11:00 IST
சிம்புதேவன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா, சாந்தனு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கசட தபற’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கசட தபற’. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி  சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் ஆகிய 6 பேர் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளனர். ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர். 



விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன் ஆகியோர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

Similar News