சினிமா
லாகின் படத்தின் போஸ்டர்

லாகின்

Published On 2021-05-24 15:01 IST   |   Update On 2021-05-24 15:01:00 IST
ராஜேஷ் வீரமணி இயக்கத்தில் பிரவீன், வினோத் கிஷன், ப்ரீத்தி நடிப்பில் உருவாகி இருக்கும் லாகின் படத்தின் முன்னோட்டம்.
ஜே.எப்.எல். புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் 'லாகின்'. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் கிஷன் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி ராஜேஷ் வீரமணி இயக்கி இருக்கிறார்.

சாப்ட்வேரில் வேலை பார்க்கும் நண்பர்கள் இரண்டு பேர், தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த தொழில்நுட்பம் அவர்கள் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது. அந்த விளையாட்டின் விளைவை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்.


ப்ரீத்தி 

இன்றைய சூழ்நிலையில் ஏதேதோ தேவைகளுக்காக லாகின் பண்ணிகிட்டே இருக்கிறோம், லாகின் செய்து உள்ளே சென்று தெரியாத விஷயங்களையும் தவறான விஷயங்களையும் செய்தோமேயானால் ஏற்படும் விளைவை பற்றியே லாகின் படம் சொல்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

Similar News