சினிமா
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா நடிப்பில் உருவாகி வரும் ‘சண்டக்காரி தி பாஸ்’ படத்தின் முன்னோட்டம்.
திலீப்-மம்தா மோகன்தாஸ் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கி கேரளாவில் வெற்றி பெற்ற மலையாள படம், ‘மை பாஸ்.’ இந்த படத்தை ‘சண்டக்காரி தி பாஸ்’ என்ற பெயரில், தமிழில் தயாராகி உள்ளது. விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார்.
ஆர்.மாதேஷ் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார். இவர், விஜய் நடித்த ‘மதுர,’ பிரசாந்த் நடித்த ‘சாக்லேட்’, விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ வினய் நடித்த ‘மிரட்டல்,’ திரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களை இயக்கியவர்.
நடிகை ஸ்ரேயா, இயக்குனர் மாதேஷ், நடிகர் விமல்
மேலும் பிரபு, கே.ஆர்.விஜயா, ரேகா, சத்யன், மகாநதி சங்கர், கிரேன் மனோகர், தெலுங்கு பட வில்லன் தேவேந்தர் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். ஜெ.ஜெயக்குமார் தயாரித்துள்ளார். வித்தியாசமான அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது. பெரும்பகுதி காட்சிகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.