சினிமா
விமல், வரலட்சுமி

கன்னிராசி

Published On 2020-05-13 14:25 IST   |   Update On 2020-05-13 14:25:00 IST
எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னிராசி படத்தின் முன்னோட்டம்.
கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.‌ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ள படம் ‘கன்னி ராசி’. இதில், விமல் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க, எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் தயாராகியுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண் டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். 



இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். இதில், விமலும், வரலட்சுமியும் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதும் விமலும், வரலட்சுமியும் இடம் பெறும் காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்றார்.

Similar News