சினிமா
அழியாத கோலங்கள் 2 படக்குழு

அழியாத கோலங்கள் 2

Published On 2019-11-27 15:00 IST   |   Update On 2019-11-27 15:00:00 IST
எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி நடித்துள்ள ’அழியாத கோலங்கள் 2’ படத்தின் முன்னோட்டம்.
எம்.ஆர்.பாரதி இயக்கியுள்ள படம் ‘அழியாத கோலங்கள் 2’. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ், நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து இயக்குனர் எம்.ஆர். பாரதி கூறுகையில், ‘‘பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் நினைவாக இந்தப்படத்திற்கு ‘அழியாத கோலங்கள் 2’ என பெயர் வைத்துள்ளோம். மற்றபடி அவர் இயக்கிய அழியாத கோலங்கள் படத்தின் கதைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் படம் ஒரு வங்காளப் படத்தின் ரீமேக்காகும்.



சாகித்ய அகடாமி விருது பெற்ற ஒரு எழுத்தாளன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு, தன் முன்னாள் காதலியை பார்க்கச் செல்கிறார். அந்த ஒரு இரவில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்தப் படம் வங்காளத்தில் பல விருதுகள் வாங்கி சாதனை படைத்தன. இந்தப் படத்தில் ஹீரோவாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவரது மனைவியாக ரேவதியும், காதலியாக அர்ச்சனாவும் நடித்துள்ளனர். நடிகை ஈஸ்வரிராவ் செய்தியாளராகவும், நடிகர் நாசர் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். 

Similar News