சினிமா
செந்தில், நிம்மி நடிப்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் மேகி படத்தின் முன்னோட்டம்.
சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘மேகி’. ரியா, நிம்மி, ஹரிணி ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்து உள்ளனர். மேலும் செந்தில், அஜித் பிரகாஷ், திடியன், கலா பிரதீப், மண்ணை சாதிக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படம் குறித்து பேசிய இயக்குனர் கார்த்திகேயன், "மேகி ஒரு காமெடி ஹாரர் படம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கவரக் கூடிய வகையில் மேகி உருவாகியுள்ளது. கொடைக்கானலில் சுற்றுலா கதைப்படி நண்பர்கள் ஐந்து பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார்கள். அப்போது அவர்களது வாகனம் பழுதாகிவிடுகிறது. காட்டுப் பகுதியில் உள்ள ஒரு பங்களா வீட்டில் ஒரு பெண் இருக்கிறார்.
அவரிடம் சென்று உதவி கேட்கிறார்கள். ஆனால் அந்த பங்களாவில் இருக்கும் பெண் தான் 'மேகி' பேய். அந்த பேயிடம் ஐந்து பேரும் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களுடன் திருடன் ஒருவனும் சேர்ந்து மாட்டிக்கொள்கிறான். அவர்கள் அனைவரும் அந்த பேயிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை காமெடி கலந்து திரில்லிங்காக சொல்லிருக்கிறேன்.