சினிமா
மிஸ்டர் டபிள்யூ

மிஸ்டர் டபிள்யூ

Published On 2019-11-08 14:42 IST   |   Update On 2019-11-08 14:42:00 IST
சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிப்பில் எஸ்.பி.சித்தார்த், வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் டபிள்யூ படத்தின் முன்னோட்டம்.
சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ‘மிஸ்டர் டபிள்யூ’.  எஸ்.பி.சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மிலன் கலையையும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், அருள்கோவன் - அசார் நடன பயிற்சியையும், தமிழ் - நிரன்சந்தர் ஒளிப்பதிவையும், தினேஷ் - ரகு தயாரிப்பு நிர்வாகத்தையும், வல்லவன் - அருண் பாரதி,கோசேஷா மூவரும் பாடல்களையும் கவனிக்கின்றனர்.

சென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இதன் இணைத்தயாரிப்பு பொறுப்பை அருள்கோவன் ஏற்றுள்ளார். பிரபல முன்னனி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு "மிஸ்டர் டபிள்யூ" என்கிற கதையை எழுதி வசனம் தீட்டி திரைக்கதை அமைத்து தானே இசையமைத்து தமது முதல் படமாக டைரக்டு செய்து வருகிறார் நிரோஜன் பிரபாகரன்.

Similar News