சினிமா
ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி

உன் காதல் இருந்தால்

Published On 2019-10-17 08:42 GMT   |   Update On 2019-10-17 08:42 GMT
ஹாசிம் மரிக்கார் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் உன் காதல் இருந்தால் படத்தின் முன்னோட்டம்.
கேரளாவில் பிரபலமான 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் முதல் முதலாக தமிழில் தயாரிக்கும் படம் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும்,  அவருடன் 3 நாயகிகளும் நடிக்கிறார்கள். சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகியோர் நடிக்கிறார்கள். 

ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ், சாக்ஷி திவிவேதி, மற்றும் காயத்ரி ஆகியோரும் நடிக்கிறார்கள். சாஜித் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் சுரேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். மன்சூர் அஹமத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ஸ்ரீகாந்த் தேவா மேற்கொண்டுள்ளார். 



படம் குறித்து ஹாசிம் மரிக்கார் கூறியதாவது :-  'உன் காதல் இருந்தால்' படம் ஹாரர், நகைச்சுவை, குடும்ப உறவுகள், காதல் என்று  பல திருப்பங்கள் நிறைந்திருக்கும். படத்தின் நேரம் 2 மணி நேரம் தான். படம் பார்க்கும் மக்கள் படத்துடன் அவர்களைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் படியாக.. இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் என்று தோன்றும் வண்ணம் இருக்கும். மேலும், இந்த படத்தில் ஒரே ஒரு காட்சி தான். அந்த ஒற்றைக் காட்சியின் விளக்கம் தான் முழு படம். அது தான் இந்த படத்தின் சிறப்பு. என கூறினார்.
Tags:    

Similar News