சரண் இயக்கத்தில் ஆரவ், காவ்யா தப்பார் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் முன்னோட்டம்.
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்
பதிவு: செப்டம்பர் 26, 2019 14:14
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்
சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் S.மோகன் தயாரித்துள்ள திரைப்படம் “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்”. இயக்குநர் சரண் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஆரவ் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக காவ்யா தப்பார் நடித்துள்ளார். நாசர், ராதிகா சரத்குமார், ரோகிணி முதலான பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய, கே வி குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே கிங் இசையமைத்துள்ளார்.
சரணின் வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் அவரது வழக்கமான பாணியில் காமெடி திரில்லர் என அனைத்தும் அடங்கிய ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது “மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்”.
படம் குறித்து இயக்குநர் சரண் கூறியதாவது: வசூல்ராஜா எனக்கு தலை என்றால் மார்க்கெட் ராஜா எனக்கு பாதம். இனிமேல் நான் நடைபோடுவேன். இப்படத்தில் அமர்ககளம் படத்திற்கு நேரெதிரான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா மேடம். என் படங்களில் வைரமுத்து பரத்வாஜ் இல்லாத குறையை போக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சைமன் கே கிங்.
இந்தப்படத்தில் வேற லெவல் எனச் சொல்லக்கூடிய உழைப்பைத் தந்திருக்கிறார் என் தம்பி கே.வி. குகன். என் அம்மா இருந்து எங்களைப் பார்த்திருக்க வேண்டும். ஆரவ் இந்தப்படத்தில் இரு வேறு சாயலில் நடிக்க வேண்டும் ஒரு தேர்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமா தாதாவாக மாறுவார். இந்தப்படம் அனைவரும் ரசிக்கும்படியான கமர்ஷியல் படமாக இருக்கும் என்றார்.
Related Tags :