சினிமா
மல்லி

மல்லி

Published On 2019-08-29 08:32 GMT   |   Update On 2019-08-29 08:32 GMT
வெங்கி நிலா இயக்கத்தில் ரத்தன் மௌலி, மஞ்சு தீக்ஷித் நடிப்பில் உருவாகி வரும் ‘மல்லி’ படத்தின் முன்னோட்டம்.
முத்து சன்னதி பிலிம்ஸ் மானப்ப வஜ்சல் வழங்க ரேணுகா ஜெகதீஷ் தயாரித்திருக்கும் படம் “ மல்லி “. வெங்கி நிலா இயக்கும் இப்படத்தில் ரத்தன் மௌலி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஞ்சு தீக்ஷித் நடித்துள்ளார். மேலும் டெலிப்போன் ராஜ், ரவிச்சந்திரன், அருண்ராஜா நாகேஷ், சைமன், அம்சவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வில்லனாக ஜெ.வி.ஆர் நடித்துள்ளார்.

தாஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பஷீர் இசையமைத்துள்ளார். சிதம்பரநாதன், பாண்டிதுரை ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பி.எஸ்.வாசு எடிட்டிங்கை கவனிக்கிறார். 

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், “பெற்றோரின் காதல் எதிர்ப்புக்கு பயந்து வீட்டை விட்டு ஓடிவரும் காதல் ஜோடி ஒரு காட்டு பங்களாவில் தங்குகிறார்கள்.அவர்களுக்கு ஊரில் இருந்த நண்பர்கள் மூன்று பேர் அங்கு வந்து உதவி செய்து அவர்களை  ராஜா – ராணி போல் பார்த்துக் கொள்கிறார்கள்.



மர்மமான முறையில் காதலர்கள் நிஜமாகவே ராஜா ராணி ஆகிறார்கள். அது எப்படி ஆனார்கள், உதவ வந்தவர்கள் யார்? அவர்கள் யாருக்கு? - எப்படி? - அரசாட்சி செய்கிறார்கள். அவர்களுடைய மக்கள் யார்? என்ற கோணத்தில் திரைக்கதை இருக்கும்.  இறுதியில் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு ஊர் திரும்புகின்றனர் என்ற வினாக்களுக்கு முடிவு பதில் சொல்லும். 

முழுக்க முழுக்க திகிலும், காமெடியும் கலந்து வித்தியாச கோணத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது. மல்லி விரைவில் அனைவருக்கும் வாசம் வீச வர இருக்கிறது” என்றார்
Tags:    

Similar News