சினிமா

மயூரன்

Published On 2019-04-21 13:20 GMT   |   Update On 2019-04-21 13:20 GMT
நந்தன் சுப்பராயன் இயக்கத்தில் கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள `மயூரன்' படத்தின் முன்னோட்டம். #Mayuran
பி.எஃப்.எஸ் ஃபினாகில் பிலிம் ஸ்டூடியோ என்ற பட நிறுவனம் சார்பில் கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் `மயூரன்'. 

மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். இதில் வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா, கைலாஷ், சாஷி, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - பரமேஷ்வர், இசை - ஜுபின், ஜெரார்ட், பாடல்கள் - குகை மா.புகழேந்தி, படத்தொகுப்பு - அஸ்வின், கலை -  எம்.பிரகாஷ், 
ஸ்டன்ட் - டான் அசோக், நடனம் - ஜாய்மதி, தயாரிப்பு - கே.அசோக்குமார், பி.ராமன், ஜி.சந்திரசேகரன், எம்.பி.கார்த்திக், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நந்தன் சுப்பராயன்.



படம் பற்றி இயக்குனர் நந்தன் சுப்பராயன் கூறியதாவது,

சாதாரண குடும்பத்தின் கனவுகளை சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல் போனதின் மர்ம முடிச்சுகள் மேலும், மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது. கல்லூரி விடுதிகள் என்பது வெறும் தங்கி போகும் வாடகை சத்திரம் அல்ல அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறை களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ, மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம்.

சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும், வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடிகளில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனி மனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்து போடுகிறது என்பதை பற்றி பேசும்
படம் தான் மயூரன். 

படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது என்றார். #Mayuran

Tags:    

Similar News