சினிமா

இலை

Published On 2017-03-10 02:32 GMT   |   Update On 2017-03-10 02:42 GMT
பெண் கல்வியை வற்புறுத்தும் ‘இலை’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
லீப் புரொடக்‌ஷன்ஸ் இண்டர்நே‌ஷனல் தயாரித்துள்ளபடம் ‘இலை’. இது ஒரு பெண் தனது கல்வியில் சாதிக்கத் தடைகளைத்  தாண்டி எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்கிறாள் என்பதைச் சொல்லும் கதை.

சுவாதி நாராயணன் நாயகியாக நடிக்கிறார். எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடிக்கிறார். இவர்களுடன் கன்னட நடிகர்  கிங்மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ், கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா  நடித்துள் ளனர். ஒளிப்பதிவு - சந்தோஷ் அஞ்சல், இசை- விஷ்ணு வி.திவாகரன், வசனம் -ஆர்.வேலுமணி, கலை -ஜைபின்  ஜெஸ்மஸ், எடிட்டிங் - டிஜோ ஜோசப். இயக்கம்-பினிஷ்ராஜ்.



“இது 1991-ல் நடக்கும் கதை. அந்த ஊரில் பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்கக்கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு. அந்த ஊரில்  வசிக்கும் நாயகிக்கோ படித்து வாழ்வில் உயர வேண்டும் என்பது கனவு. ஆனால் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு ? என்று  பெற்ற தாயும், தாய் மாமனும் அவளது படிப்புக்கு குறுக்கே நிற்கிறார்கள். ஆனால் நாயகியின் அப்பா, மகளுக்கு ஆதரவாக  இருக்கிறார்.



நாயகிக்கு வருகிற தடைகள் அவள் தேர்வு எழுத முடியாத அளவுக்குக் குறுக்கே நிற்கின்றன. தடைகளை மீறி அவள் தேர்வு  எழுதினாளா, இல்லையா என்பதே கதை. இதில் ஒரு முழு சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. அப்படி ஒரு  வணிக ரீதியிலான படமாக ‘இலை’ உருவாகியுள்ளது” என்றார்.

Similar News