சினிமா

ஒண்டிக்கட்ட

Published On 2017-02-25 15:47 IST   |   Update On 2017-02-25 15:46:00 IST
இசையமைப்பாளர் பரணி இயக்கும் ‘ஒண்டிக்கட்ட’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
இசையமைப்பாளர் பரணி முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுக்கும் படம் ‘ஒண்டிக்கட்ட’.

பிரண்ட்ஸ் சினி மீடியா பட நிறுவனம் சார்பாக மேகலா.ஆர்.தர்மராஜ், ஷோபா.கே.கே.சுரேந்திரன், சுமித்ரா பரணி ஆகியோர்  இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக  நேகா நடிக்கிறார். இவர்களுடன் தர்மராஜ், கலைராணி, சாமி நாதன், முல்லை, கோதண்டம், சென்ராயன், மதுமிதா, ஹலோ  கந்தசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.



ஒளிப்பதிவு-ஆலிவர் டெனி, இசை-பரணி, பாடல்கள்- கபிலன், பரணி, தர்மா, எடிட்டிங் -விதுஜீவா, நடனம்- சிவசங்கர், தினா,  ராதிகா, ஸ்டண்ட்-குபேந்திரன், கலை-ராம், எழுத்து, இயக்கம்-பரணி.

படம் பற்றி இயக்குனர் பரணியிடம் கேட்ட போது...

“நான் இசையமைப்பாளராக 40 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளேன். பெரியண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகி, பார்வை  ஒன்றே போதுமே, சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களின் பாடல்கள் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை  தந்தன. ஒரு நல்ல கதை அமைந்ததால் `ஒண்டிக்கட்ட' படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறேன். ஒரு உண்மைக் கதையை  நல்ல திரைக்கதையாக்கி அதை படமாக்கி இருக்கிறோம். தையமுத்து, நல்லதம்பி, பஞ்சவர்ணம் என்ற மூன்று கதாப்பாத்திரங்கள்  கதையின் உயிர் நாடி. முல்லை, கோதண்டம் இருவரும் கவுண்டமணி- செந்தில் மாதிரி காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.  இந்த படத்தின் பாடல்கள் பட்டையை கிளப்பும்” என்றார்.

Similar News