சினிமா

அச்சமில்லை அச்சமில்லை

Published On 2017-02-23 07:28 GMT   |   Update On 2017-02-23 07:28 GMT
இயக்குனர் அமீர் முக்கிய வேடத்தில் நடிக்கும் `அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
இயக்குனர் அமீர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’.

இயக்குனர் அமீரின் உதவியாளர் முத்து கோபால் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். நாயகி சாந்தினி  தமிழரசன். இவர்களுடன் ஹரீஷ் ஜாலே, தருஷி, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், எம்.முனிஸ் ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள்.  இயக்குனர் அமீர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.



ஒளிப்பதிவு - அருண்குமார், இசை - விவ்யுரி குமார், பாடல்கள் - சினேகன், படத்தொகுப்பு - ஆதியப்பன் சிவா, தயாரிப்பு -  இயக்குனர் அமீர், இயக்கம்- முத்து கோபால்.

படம் குறித்து இயக்குனர் முத்து கோபால் கூறும் போது...

“இந்த படத்தின் கதை பிடித்து இருந்ததால் நானே இயக்கி கதாநாயகனாக நடிக்க விரும்பினேன். எனது ஆசையை நிறைவேற்ற,  அப்பா நிலத்தை விற்று பணம் எனக்கு கொடுத்தார். என்றாலும் பண தட்டுப்பாடு ஏற்பட்டது.



உடனே அமீர் சாரை சந்தித்தேன் அவர் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார். படத்தை பார்த்து விட்டு ‘அச்சமில்லை  அச்சமில்லை’ என்று பெயர் வைக்கலாம் என்றார். இதற்கு கே.பாலச்சந்தர் குடும்பத்தினரிடம் அமீர்சார் முறைப்படி அனுமதி  பெற்று தந்தார். இதில் அவர் விவசாயியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகி கல்லூரி மாணவியாகவும், நான்  வக்கீலாகவும் நடித்திருக்கிறோம்” என்றார்.

அமீர் பேசும் போது, “இது கோவை,திருப்பூர், சேலம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை பற்றிய படம். சமூக பிரச்சினைகளை  துணிச்சலாக சொல்லும் படம். எனவே, இதை நான் தயாரிக்க ஒப்புக் கொண்டேன். நிறைய சமூக கருத்துக்கள் இதில் இடம்  பெற்றுள்ளன” என்று கூறினார்.

Similar News